Saranalayam

ஸ்ரீ பூதநாத ஐயப்ப திவ்ய
நாம சரணாலயம்
அத்வைத மார்க்கதின் உச்ச நிலையான முக்தி எனும் கைவல்யபதத்தில் சாயுட்ச்சிய பதவிக்காக ( பக்தனான தான் என்ற நிலை கரைந்து ஐயனோடு ஒன்றிணைந்து ஐயனாதல்) அகமே நாம் நாமே அகம் என்ற தத்வமஸி ஞானத்திற்காக ஐயனின் நாம ஜெபத்தால் அஜபா நிலையில் சதாகால ஐயன் நினைவால் சரணாகதியில் சாதனைக்கான ஓர் ஸ்தலமே ஸ்ரீ பூதநாத ஐயப்ப திவ்ய நாம சரணாலயம்.
ஐயன் ஐயப்பனும் அவருடைய திவ்ய நாமமும் வெவ்வேறில்லை. அவரது திவ்ய நாமமே ஐயன் ஐயப்பன்.அவரது திவ்ய நாமம் நமது மனதில் தோன்றியவுடன் நமது உள்ளமானது ஐயன் ஐயப்பனின்; சானித்யத்தால் நிரம்புகிறது.
நமது சிந்தனைகளை ஐயன் மேல் நிருத்தி அவருடைய திவ்ய நாமத்தை இடையூறாமல் நினைவுகூர்வதை விட இக்கலியுகத்தில் எளிமையான வழி வேறில்லை. ஐயன் திவ்யநாமத்தை உரக்க ஜபம் செய்யும் போது நமது இதயத்தில் பக்தி வெள்ளம் பெருக்கெடுத்து பரவசநிலை அடைந்து ஐயனை உணர்கிறோம். ஏனெனில் நாம ஒலி நம் மனதை விழிப்படையச் செய்து ஐயனின் கருணையையும் அன்பையும் பேரானந்ததையும் உணரச்செய்கிறது.

ஐயனின் திவ்ய நாமத்தை உரக்க சொல்வதால் எழும் இனிமையும் ஆனந்தமும் ஒப்பர்க்கரிய தெய்வீக அனுபவமாகும். ஐயப்பபக்தரின் மனம் இசையில் லயிக்கும் பொழுது மெய் சிலிர்த்து அவருக்கு ஐயப்ப நாமமே பிரம்மானந்த அனுபவத்தை அளிக்கிறது
ஐயனின் திவ்யநாமம் அவனை ஆன்மீக வாழ்வின் உச்ச நிலைக்கு இட்டுச்செல்கிறது . மாய இருட்டில் மூழ்கிய குருட்டு ஜீவனுக்கு திவ்ய திருஷ்டியை அளிக்கிறது. ஐயனின் திவ்யநாமம் உன்னதம் பொருந்திய அவனது விஸ்வரூப தரிசனத்தை அளிக்க வல்லது. ஐயன் திருநாமத்தின் மகிமை வெல்ல முடியாத மாபெரும் சக்தி கொண்டது. ஐயப்ப நாமத்தின் மகிமையால் யாராலும் வெல்ல முடியாத மகிஷியான மனமானது மகிஷி வதம் எனும் மனோ நாசத்தால் (மனமற்ற நிலை) ஐயப்பனிடம் சரணடைந்து ஐயப்பனாகவே மாறுகிறது. இது சத்தியம்.
ஐயன் ஐயப்பனின் திவ்ய நாம பஜனையில் தஞ்சம் அடைந்தவன் பல அதிசயங்களை ஆற்ற முடியும். அவன் இயற்கையின் சக்திகளை வென்று மனித ஜீவன்களின் மனதில் ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்த முடியும். இது சத்தியம்.
ஐயனின் திவ்யநாமத்தால் மனித ஜீவனை ஐயப்பனாகவே மாற்ற முடியும்.ஐயன் ஐயப்பனின் திவ்யா நாம பஜனை செய்யும் இடத்தில் ஐயனின் பெருங்கருணையினால் அந்த சூழ்நிலையானது தூய்மை அமைதி பேரானந்தம் ஆகியவற்றால் நிரம்பி பரவசப் பெருநிலை அடைகிறது. இது சத்தியம்.
ஐயன் ஐயப்பனின் திவ்யநாமம் பூரணத்துவம் பொருந்தியது. அவன் நாமத்தை சொல்வதே யோகம். அதுவே தியானம். அதனால் ஏற்படும் பரவச நிலையே சமாதி. வேறு எந்த ஒரு சாதனையின் உதவியின்றி ஐயனின் நாமம் ஒன்றே ஒருவனுக்கு எங்கும் அவருடைய தரிசனத்தை அளிக்க வல்லது. இது சத்தியம்.
எனதருமை அறிவார்ந்த பக்த கோடிகளே. நீங்கள் எந்த இனம்இ மொழிஇ குலம்இ கோட்பாடுஇ நாடு சார்ந்தவராயினும் ஐயன் ஐயப்பனின் திவ்ய நாமத்தை நினைத்தலினாலோ. ஜபித்தலினாலோ பஜித்தல்னாலோ உங்களின் ஆன்மா தூய்மையாவது மட்டுமல்லாமல் எங்கும் நிறைந்த ஐயன் ஐயப்பனின் பேரொளியாலும் அன்பினாலும் பிரகாசிக்கும். இது சத்தியம்.
ஐயப்பனின் திவ்யநாமத்தை எவர் ஒருவர் சிரத்தை. நம்பிக்கைஇ பொறுமை ஒருமைப்பாடு ஆகியவற்றுடன் நாம ஜபம் செய்கிறாரோ அவரது முகமும் உடலும் ஓர் அசாதாரன ஒளியால் பிரகாசிக்கும். இது சத்தியம்.
எவர் ஒருவர் ஐயன் ஐய்யப்பனின் திவ்ய நாமத்தை சதா காலமும் மனதாலும் வாக்காலும் செய்கையாலும் பஜிக்கிறார்களோ. ஐபிக்கிறார்களோ. பூஜிக்கிறார்களோ அவர் அண்ட சராசரங்களிலும் காண்பதனைத்தும் ஐயன் ஐயப்பனாகவே காண்பார்கள். பின்பு ஐயன் ஐயப்பனிடம் ஒன்றிணைந்து ஐயன் ஐயப்பனாகவே ஆகிவிடுவார்கள். சத்தியம். இதுவே தத்வமஸி. இது
- தவத்திரு சித்தயோகி பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள்
ஓம் குருவனம்
"லோக வீரம் மஹா பூஜ்யம் ஸர்வ ரக்ஷாகரம் விபும் பார்வதி
ஹ்ருதயானந்தம் சாஸ்தாரம் ப்ரணமாம்யஹம்"
