ஓம் குருவனம்
ஜீவ காருண்ய விஸ்வ கேந்திரா அறக்கட்டளை
இயற்க்கை வரலாற்று சிறப்பு மிக்க கொல்லிமலை சாரலில் எழில்கொஞ்சும் பசுஞ் சோலையின் குளுமையிலே மெய் சிலிர்த்து நிற்கும் கனிகளும் பல வண்ணப்பறவைகளின்; இசை கானங்களின் இனிமையும் ரீங்கார வண்டுகளின் நாதத்தோடு உரசுகின்ற மலர்களும் மூலிகை, மரம்,செடி, கொடி மலர்களின் நறுமணத்தோடு நனைகின்ற தென்றலும், மேகங்கள் மோதுகின்ற மலை முகடுகளின் உச்சியில் ஊறுகின்ற நீர்சுனைகளின் ஜீவிகளின் சரணாலயமாகவும் தன்னை அறிவிக்கும் தவச் சாலையாகவும், உயிர் மூச்சுக்காற்றின் ஆக்சிஜென் வங்கியாகவும் கிராமிய கலாச்சாரத்தை உயிர்பிக்கும் வகையில் மலைகளின் மடியில் தவழ்ந்திடும் வளமாய் அமைந்தது தான் ஓம் குருவனம். நவகோடி சித்தர்களின் அருளாட்சிக்கு உட்பட்ட சித்தர்களின் புனித பூமியே ஓம் குருவனம்.
இந்தியாவிலேயே மிக உயரமான அருள்மிகு குருபகவான் தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் புண்ணிய பூமியே ஓம் குருவனம். ஜகத்குரு ஆதிசங்கரரால் முறைப்படுத்தி உபதேசிக்கப்பட்ட ஷன்மத கோவில்களை தன்னகத்தே கொண்ட தெய்வீக பூமி ஓம் குருவனம்.

தத்வமஸி ஞானபீடம்
தன்னுள் தன்னில் தன்னை தானாக்கி அந்த தானே அவனாகி உயிராகி மனமாகி இம் மூன்றும் சேர்ந்து ஓங்கார நாதனாகி நாத பிரம்ம ஜோதி பிழம்பாய் ஓங்கார ரூபனாகி மகர ஜோதியாய் மனோன்மணியாய் மணிகண்ட மகாபிரபுவாய் ஆதியும் அந்தமும் இல்லாத அனாதியான அழிவில்லா சாஸ்வதமான சாஸ்தாவாய் தலைவனாய் இறைவனாய் ஐயன் ஐய்யப்பனாய் அந்த ஐயன் நாம ஜெபத்தால் விளையும் நாத பிரம்ம தவத்தால் உயர்ந்த உத்தம உயிர் தத்துவமே உயிர் அறியும் உயிர் காக்கும் சத்தியமே தத்வமஸி கொள்கை.அந்த கொள்கையை அறியும் அறிவே ஞானம். அந்த உயிர் நாத பிரம்மதை உயிர் அறியும் ஞானத்தை அறிவிக்கும் அறிவிக்க செய்யும் சேஷத்திரமே - தத்வமஸி ஞானபீடம்.
- தவத்திரு சித்தயோகி பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள்
ஓம் குருவனம்
ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயன் ஐயப்பனின்
திருக்கோவில்
ஸ்தாபகத்திற்கான பின்னணி
அறிவார்ந்த ஆன்மீக உள்ளவழிப் பாதை பயணத்தில் ஆனந்தமாய் வாழும் வாழ்வை இலட்சியமாய்க் கொண்டு இருவிழி கடந்து ஒருவிழி வழியே ஒளி ஒலியான ஓம்கார ரூப மணிகண்ட மகர ஜோதி ஏக கதியான ஏகாந்தவாசன் தர்மசாஸ்தா சுவாமி ஐயன் ஐயப்பனின் வழிபாடும்இ ஐயன் தத்துவமும்இ வாழ்வும்இ வாக்கும்இ அறிந்துஇ தன்மயமாய் இன்புற்று வாழ்வதற்கான அத்வைத மார்க்கம் வழியே, பஞ்சாக்ஷரம், அஷ்டாச்சரம், நவாக்ஷரம், ஷடக்ஷரம், ஸ்ரீ வித்யா, காயத்ரி பிரணவம் ஆகிய மந்திர யந்திர தந்திர மற்றும் ரூப அரூப சக்திகளை கடந்து ஏகத்துவமான ஏக சக்தியானஇ ஏகாம்பரஇ ஏகாந்தவாசன்இ தர்மசாஸ்தா சுவாமி ஐயன் ஐயப்பனின் தத்வமஸி மகாவாக்கியதின் படி மகிஷ வதம் எனும் மனோ நாசத்தை குறி வைத்து அவன் அருளாலே அவன் அருளாலே...
More about
ஷன்மத கோவில்கள்
அருள்மிகு பஞ்சமுக ஹேரம்ப மகாகணபதி திருக்கோவில்
அருள்மிகு சுவாமி யோகநாத முக்தீஸ்வரர் திருக்கோவில்
அருள்மிகு இலட்சுமி நாராயணர் திருக்கோவில்
அருள்மிகு யோகநாயகி சித்தவித்யாயினி அம்பாள் திருக்கோவில்
அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சிவ சுப்ரமணியர் திருக்கோவில்
அருள்மிகு சூரிய
பகவான் திருக்கோவில்
தெய்வீகக் கொல்லிமலை
பல்லாயிரகணக்கான மிக சக்திவாய்ந்த பிரசித்தி பெற்ற மிக அறிய மூலிகைகளை தன்னகத்ததே கொண்டது, கொல்லிமலை . வரலாற்று சிறப்பு மிக்க கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆட்சி செய்த பூமி, கொல்லிமலை. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பாடல் பெற்ற ஸ்தலமாக மிக பழமையான அரப்பளீஸ்வரர் சிவாலயத்தை தன்னகத்ததே கொண்டது, கொல்லிமலை. மிக சக்திவாய்ந்த வன தேவதை கொல்லிப்பாவை எனும் காளி தேவியின் தெய்வீக அருளாட்சிக்குட்பட்டது கொல்லிமலை.
தென் இந்தியாவிலேயே மிக மிக உயரமான நீர்வீழ்ச்சியாக “ஆகாய கங்கை” எனும் அழகிய ஆர்பரிக்கும் தெய்வீக மூலிகை அருவியை தன்னகத்ததே கொண்டது, கொல்லிமலை. கனவு பூமியாக, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக தினம்தோறும் தன்னிடத்தில் வரும் ஆயிரம் ஆயிரம் மக்களை ஆனந்தத்தில் குளிர்விக்கும் மலையாக திகழ்வது கொல்லிமலை. எங்கும் பசும் போர்வை போர்த்தி விண்ணை முட்டும் உயரம் கொண்ட பல லட்சக்கணக்கான மரங்களால் பறந்து விரிந்த பரப்பளவைக் கொண்டு மலைகளின் அரசியாய் அதிசயமாய் திகழ்வது, கொல்லிமலை.
- மகான் அகத்திய முனிவர்
கொல்லிமலை

ஸ்ரீ பூதநாத ஐயப்ப திவ்ய
நாம சரணாலயம்
அத்வைத மார்க்கதின் உச்ச நிலையான முக்தி எனும் கைவல்யபதத்தில் சாயுட்ச்சிய பதவிக்காக ( பக்தனான தான் என்ற நிலை கரைந்து ஐயனோடு ஒன்றிணைந்து ஐயனாதல்) அகமே நாம் நாமே அகம் என்ற தத்வமஸி ஞானத்திற்காக ஐயனின் நாம ஜெபத்தால் அஜபா நிலையில் சதாகால ஐயன் நினைவால் சரணாகதியில் சாதனைக்கான ஓர் ஸ்தலமே ஸ்ரீ பூதநாத ஐயப்ப திவ்ய நாம சரணாலயம்.
ஐயன் ஐயப்பனும் அவருடைய திவ்ய நாமமும் வெவ்வேறில்லை. அவரது திவ்ய நாமமே ஐயன் ஐயப்பன்.அவரது திவ்ய நாமம் நமது மனதில் தோன்றியவுடன் நமது உள்ளமானது ஐயன் ஐயப்பனின்; சானித்யத்தால் நிரம்புகிறது.
Read Moreஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்ப திருக்கோவில்
மாதாந்திர
நடைத்திறப்பு தினசரி நித்ய நிகழ்ச்சிகள்
பிரதி தமிழ் மாத முதல் 9 நாட்களுக்கு மட்டும் ஸ்ரீ பூதநாத சுவாமி திவ்ய நாத ஓங்கார ரூபன் ஐயன் ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்று ஐயனின் விஸ்வரூப தரிசன காட்சி அருளப்படுகிறது.
பிரதி தமிழ் மாத முதல் முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு மண்டல கால விரத தவத்தை முடிக்கும் ஆண் பெண் மற்றும் குழந்தைகளான தவயோக சுவாமிமார்கள் சிறப்பு வழி பாதை எனும் தெய்வீக 18 ஆம் படி வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள்.
விரதம் மேற்கொள்ளாத ஆண் மற்றும் பெண் குழந்தைகள் 6 வது நாள் மற்றும் 9 வது நாள் பொது வழிப்பாதை வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள்
Read More
"ஓம் பூதநாதாய
வித்மஹே பவ நந்தனாய தீமஹி
தன்னோ சாஸ்தா : ப்ரசோதயாத்"
