Temple Brochure
img
Om Guruvanam

TEMPLE POOJAS

img
img

ஓம் சுவாமியே
சரணம் ஐயப்பா

ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்ப திருக்கோவில் மாதாந்திர நடைத்திறப்பு தினசரி நித்ய நிகழ்ச்சிகள்

பிரதி தமிழ் மாத முதல் 9 நாட்களுக்கு மட்டும் ஸ்ரீ பூதநாத சுவாமி திவ்ய நாத ஓங்கார ரூபன் ஐயன் ஐயப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை மற்றும் புஷ்பாஞ்சலி நடைபெற்று ஐயனின் விஸ்வரூப தரிசனக் காட்சி அருளப்படுகிறது.

பிரதித் தமிழ் மாதம் முதல் 5 நாட்கள் மட்டும் ஒரு மண்டல கால விரத தவத்தை முடிக்கும் ஆண் பெண் மற்றும் குழந்தைகளான தவயோக சுவாமிமார்கள் சிறப்பு வழிப் பாதை எனும் தெய்வீக 18 ஆம் படி வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள்.

(குறிப்பு: 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே விரதம் இருந்து இருமுடி ஏந்தி ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள் )

6 வது நாளன்று விரதம் மேற்கொள்ளாத தூய்மை நிலையில் உள்ள அனைத்து பெண்களும் பொது வழிப்பாதை வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள்.

7 வது நாள் விரதம் மேற்கொள்ளாத முதியவர்கள் பொது வழிப்பாதை வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனத்தை காண அனுமதிக்கப் படுவார்கள்.

8 வது நாள் உடல் ஊனமுற்றோர் பொது வழி பாதை வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனத்தை காண அனுமதிக்கப்படுவார்கள்.

9 வது நாள் விரதம் மேற்கொள்ளாத தூய்மை நிலையில் உள்ள அனைத்து ஆண்களும் பொது வழிப்பாதை வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள்.

விரதம் மேற்கொள்ளாத ஆண் மற்றும் பெண் குழந்தைகள் 6 வது நாள் மற்றும் 9 வது நாள் பொது வழிப்பாதை வழியே ஐயன் ஐயப்பனின் விஸ்வரூப தரிசனக்காட்சியை காண அனுமதிக்கப்படுவார்கள் |

img
Temple Steps
3.30 AMதிருப்பள்ளி எழுச்சி
4.00 AMதிருநடை திறப்பு
4.05 AMஅபிஷேகம்
4.30 AMகணபதி ஹோமம்
4.30 AM - 7.00 AMநெய்யபிஷேகம்
7.30 AMஉஷா பூஜை
8.00 AMஉதயஸ்தமன பூஜை
8.30 AM - 11.00 AMநெய்யபிஷேகம்
11.00 - 11.30 AMஅஷ்டாபிஷேகம்
11.30 AM - 12.00 PMகலசாபிஷேகம்
12.00 PM - 12.30 PMஉச்சி பூஜை
1.00 PMதிருநடை அடைப்பு
3.00 PMதிருநடை திறப்பு
6.00 PMதீபாராதனை
7.00 PM - 9.30 PMபுஷ்பாபிஷேகம்
7.30 PMபழ பூஜை
9.30 PMஅந்தா பூஜை
11.00 PMஹிரிவராசனம்

பாடுடன் திருநடை அடைப்பு