Thatwamasi Gnanapeedam
தத்வமஸி ஞானபீடம்
தன்னுள் தன்னில் தன்னை தானாக்கி அந்த தானே அவனாகி உயிராகி மனமாகி இம் மூன்றும் சேர்ந்து ஓங்கார நாதனாகி நாத பிரம்ம ஜோதி பிழம்பாய் ஓங்கார ரூபனாகி மகர ஜோதியாய் மனோன்மணியாய் மணிகண்ட மகாபிரபுவாய் ஆதியும் அந்தமும் இல்லாத அனாதியான அழிவில்லா சாஸ்வதமான சாஸ்தாவாய் தலைவனாய் இறைவனாய் ஐயன் ஐய்யப்பனாய் அந்த ஐயன் நாம ஜெபத்தால் விளையும் நாத பிரம்ம தவத்தால் உயர்ந்த உத்தம உயிர் தத்துவமே உயிர் அறியும் உயிர் காக்கும் சத்தியமே தத்வமஸி கொள்கை.அந்த கொள்கையை அறியும் அறிவே ஞானம். அந்த உயிர் நாத பிரம்மதை உயிர் அறியும் ஞானத்தை அறிவிக்கும் அறிவிக்க செய்யும் சேஷத்திரமே - தத்வமஸி ஞானபீடம்.
- தவத்திரு சித்தயோகி பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள்
ஓம் குருவனம்
ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயன் ஐயப்பனின்
திருக்கோவில்
ஸ்தாபகத்திற்கான பின்னணி
அறிவார்ந்த ஆன்மீக உள்ளவழிப் பாதை பயணத்தில் ஆனந்தமாய் வாழும் வாழ்வை இலட்சியமாய்க் கொண்டு இருவிழி கடந்து ஒருவிழி வழியே ஒளி ஒலியான ஓம்கார ரூப மணிகண்ட மகர ஜோதி ஏக கதியான ஏகாந்தவாசன் தர்மசாஸ்தா சுவாமி ஐயன் ஐயப்பனின் வழிபாடும்இ ஐயன் தத்துவமும்இ வாழ்வும்இ வாக்கும்இ அறிந்துஇ தன்மயமாய் இன்புற்று வாழ்வதற்கான அத்வைத மார்க்கம் வழியே, பஞ்சாக்ஷரம், அஷ்டாச்சரம், நவாக்ஷரம், ஷடக்ஷரம், ஸ்ரீ வித்யா, காயத்ரி பிரணவம் ஆகிய மந்திர யந்திர தந்திர மற்றும் ரூப அரூப சக்திகளை கடந்து ஏகத்துவமான ஏக சக்தியானஇ ஏகாம்பரஇ ஏகாந்தவாசன்இ தர்மசாஸ்தா சுவாமி ஐயன் ஐயப்பனின் தத்வமஸி மகாவாக்கியதின் படி மகிஷ வதம் எனும் மனோ நாசத்தை குறி வைத்து அவன் அருளாலே அவன் அருளாலே...
அவன்தாள் மந்திர வணங்கி என்ற வாசகத்திற்கிணங்க சுவாமி ஐயன் ஐயப்பனின் கருணையினால் அருளப்பட்ட மகத்தான சக்தியான மனோசக்தியை கொண்டே அம்மனதினை நித்யா நித்ய வஸ்து விவேகம் எனும் சத்விசாரத்தால் ராக-துவேஷம் எனும் விருப்பு வெறுப்புகள் அற்று காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், அசுயை, டம்பை எனும் 8 விதமான விகாரங்களை அழித்து நிலையற்றதை உணர்ந்து நிலையானதான சாஸ்வதமான சத்தியமான சாஸ்தாவான சுவாமி ஐயன் ஐயப்பனிடத்தில் சரணாகதியால் அவன் திவ்ய பாத கமலத்தை பற்றி நலமான வளமான பேரானந்த பெருவாழ்வு வாழ்வதற்காக தவத்திரு சித்தயோகி பிரம்மஸ்ரீ பார்த்தசாரதி சுவாமிகள் அவர்களால் சுவாமி ஐயன் ஐயப்பனின் பெருங்கருணை பேரருளால் மானசீகமாக உணரப் பெற்று ஐயனின் திருவருள் உத்தரவுப் படி மனித சமுதாயத்திற்காக மனித வாழ்வின் உயர்ந்த இலட்சியமும் முதல் கடமையுமான வீடு பேறு எனும் கைவல்ய பதத்தை முக்தி நிலையை அடைவதற்காக ஓம் குருவனதில் தத்வமஸி ஞானபீடத்தில் அருள்மிகு ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயன் ஐயப்பனின் திருக்கோவில் அமையப்பெறவுள்ளது.
